சென்னை வேப்பேரி, கிளமென்ஸ் சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வடிகால் குழாய் மாற்றும் பணி நடைபெற்ற போது அப்பகுதியில் உள்ள சாலை சேதம் அடைந்தது. ஆனால், இதுவரை புதிய சாலை அமைக்கப்படவில்லை. வாகனங்களில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றார்கள். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. எனவே, உடனடியாக புதிய சாலை அமைக்க வேண்டும்.