பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-05 13:58 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் சவுக்கண்டி தெரு பிரதான சாலை மற்றும் கோர்ட்டு எதிரே உள்ள சின்னையா தெரு சாலையில் பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட இடங்களில் பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்