சேலம் 42-வது வார்டு சத்தியமுா்த்தி தெ௫வில் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது இந்த பகுதியில் மழை பெய்ததால் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலையில் சாக்கடை கழிவு நீரும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அந்த தெருவில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமான சாலையை சரி செய்து தர வேண்டும்.
-விஜய், சேலம்.