மந்தாரக்குப்பம் அடுத்த கூணங்குறிச்சி செல்லும் பிரதான சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அல்லல்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியமாகும்.