தஞ்சை தொல்காப்பியர் நகரிலிருந்து ஆடக்கார தெருவிற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மண் சாலையாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மேலும் மழை நேரத்தில் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும்.
தஞ்சை, பொதுமக்கள்