சென்னை பெரம்பூர் மங்களபுரம், கிருஷ்ணதாஸ் ரோடு 3-வது தெருவில் சாலை போடுவதற்காக ஜல்லி கற்கள் போடப்பட்டு 2 வாரத்துக்கு மேல் ஆகின்றது. இன்று வரை சாலை போடும் பணி முடியவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.