சென்னை அடையாறு, காமராஜ் ஆவென்யூ சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் பள்ளிகள் இருப்பதால் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்யவேண்டும்.