சேறும், சகதியுமான சாலை

Update: 2023-06-21 16:39 GMT
பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட பொன்னேரி கிராமம் புது காலனியில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக தாா்சாலை அமைக்க வேண்டு்ம் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது