சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து கண்டதேவி செல்லும் சாலை பயன்படுத்த முடியாத வகையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பலர் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் இந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?