விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2023-06-21 15:22 GMT

கோபி மொடச்சூர் அன்பு நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கினர். ஆனால் பணியை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டனர். ஜல்லி கற்கள் ஆங்காங்கே குவியல் குவியலாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுதடுமாறி சென்று கீழே விழுந்து காயம் அடைகின்றனர். தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்