செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் இந்திரா நகரில், டாக்டர். அப்துல் கலாம் சிறுவர் நடை பாதை பூங்கா அமைந்துள்ள மெயின்ரோடு கடந்த 4 வருடங்களாக குண்டும், குழியமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.