இணைப்பு சாலை வசதி வேண்டும்

Update: 2023-06-21 13:53 GMT

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் - அப்புராசபுரம்புத்துர் சாலையில் இருந்து பண்டாரவடை. கீழத்தெரு வழியாக கருவேலி செல்லும் சாலைக்கு இணைப்பு சாலை வசதி இல்லாததால் இந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பல கி.மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் இணைப்பு சாலை வசதி செய்துதருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்

சாலை வசதி