சென்னை பெரம்பூர், பல்லவன் சாலை மழைநீர் வடிகால் பணிகள் தாமதாக நடப்பதால் அப்பகுதி முழுவதும் குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு மிகவும் மோசமாக உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் சாலையில் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, உடனடியாக சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.