மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து குரும்பனூர் பகுதிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிப்பட்டு வருகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.