சாலையில் கழிவுநீர்

Update: 2023-06-14 15:37 GMT

சென்னை மாதவரம், குமரன்தெரு பகுதியில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் கால்வாய் உடைந்து சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மக்களுக்கு நோய் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்