சென்னை மேற்கு சைதாப்பேட்டை பஸ் நிலையத்தின் நடுப்புற சாலையில் பள்ளம் விழுந்து அபாயகரமான முறையில் உள்ளது. பரபரப்பான இந்த சாலையில் வாகனங்கள் திரும்பும் இந்த இடத்தில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்குள் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?