குண்டும் குழியுமான சாலை

Update: 2023-06-11 15:50 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாளையம்பட்டியில் இருந்து கோபாலபுரம் செல்லும் கரிசல்குளம் கண்மாய் சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்