ஜெயங்கொண்டம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 20 ஆண்டுகள் ஆக போகிறது. ஆனால் நகர் பகுதி சாலைகள் தற்போதுள்ள போக்குவரத்துக்கு ஏற்றாற்போல் இல்லை. ஆக்கிரமிப்புகள், அகலம் குறைந்த சாலைகள், கட்டுப்பாடின்றி சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் போன்றவற்றால் ஜெயங்கொண்டம் நகர் பகுதிக்குள் வாகனம் ஓட்டுவது மிகவும் கடினமாகிறது. சாலைகளை அகலபடுத்தி மைத்தடுப்பு கட்டைகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்யவும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதை சீர் செய்யவும், கனரக வாகனங்கள் நான்கு ரோடு பகுதியில் வளையமுடியாமல் சிரமப்படுவால் திருச்சி சாலையையும், விருத்தாசலம் சாலையையும் இணைக்க புறவழிச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.