பெரியநாயக்கன்பாளையத்தில் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை செல்லும் வாகனங்களுக்காக அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.