அந்தியூர் அருகே உள்ள நகலூர் புதூரில் இருந்து பெருமாபாளையம் செல்லும் ரோடு மிகவும் சேதமடைந்து குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தட்டுதடுமாறி சென்று வருகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளை தடுக்க சேதமான ரோட்டை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?