சிதம்பரம் வண்டிகேட் சந்திப்பு பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக மிகவும் சுருங்கிய நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதோடு, அடிக்கடி விபத்திலும் சிக்கித் தவிக்கின்றனா். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.