உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் கிராமத்தில் இருந்து குமாரமங்கலம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் காலவிரையம் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.