குண்டும், குழியுமான ரோடு

Update: 2023-05-21 11:52 GMT

ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் பின்புறம் மோசிக்கீரனார் வீதி 1-ல் உள்ள ரோடு பல நாட்களாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்யும் போது குழிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சேறும், சகதியுமாக உள்ளதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். தற்போது பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பணி நிறைவுற்றதும் உடனே தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்