விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் இருந்து சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர் திருக்கை வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் காலவிரையம் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.