மதுரை மாவட்டம் வில்லாபுர குடியிருப்பு பகுதியில் சித்தர் தெருவில் உள்ள சாலை மிகவும்சேதமடைந்து காணப்படுகிறது.சாலை மேடு, பள்ளமாக காட்சியளிப்பதால் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.