அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் கீழ நத்தம் காலனி தெரு மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிப்பவர்களுக்கு என்று தனி மயானம் உள்ளது. ஆனால் அந்த மயானத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல பெரிதும் சிரமமாக உள்ளது. மேலும் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.