சிதம்பரம்-கடலூர் பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் ஜல்லி கற்கள், சிமெண்டு முட்டைகள் ஏற்றிக்கொண்டு லாாிகள் அதிக அளவில் செல்வதால், புழுதி அதிகமாக பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.