ரோட்டில் பள்ளம்

Update: 2023-05-07 14:41 GMT

ஈரோடு வீரபத்ரா வீதிக்கு எதிரே உள்ள சத்தி ரோட்டில் பல நாட்களாக பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். சிலர் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர். உடனே ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்