ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து மூலப்பட்டறைக்கு செல்லும் ஈ.வி.கே.சம்பத் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையின் ஓரத்தில் மண் படிந்து இருப்பதால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். எனவே தடுப்புச்சுவர் ஓரமாக உள்ள மண்ணை அகற்றுவதுபோல ஈ.வி.கே.சம்பத் சாலையோரம் உள்ள மண்ணையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.