நெல்லை டவுனில் இருந்து குற்றாலம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. எனவே அங்கு சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.