திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம், மூலங்குடி சாலையில், வடபாதி என்ற இடத்தில் மூன்று பாசன வாய்க்கால் பாலம் புதிதாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. ஆனால், மூன்று பாலத்திலும் சாலையில் கற்கள் சிதறிய நிலையில் காட்சி அளிக்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர். மேலும் சிதறி கிடக்கும் கற்கள் மீது வாகனங்கள் ஏறுவதால் விபத்துகளில் வாகன ஓட்டிகள் சிக்கிவருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.