சிதம்பரம்-வல்லம்படுகை செல்லும் மெயின் ரோட்டில் கடவாச்சேரி அருகே குறுகிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தில் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு ஒதுங்கி செல்ல போதிய இடவசதி இல்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. மேலும் குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே பாலத்தை விரிவுபடுத்தி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.