அரியலூர் மாவட்டம், செந்துறை மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற பழமையான சிவதாண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலை கடந்த பல மாதங்களுக்கு முன்பு மழையால் மிகவும் சேதமடைந்தது. அங்கே இருந்த பாலமும் சேதமடைந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் புதிய கல்வெட்டு பாலம் அமைக்கப்பட்டபோது அந்த சாலை பாலப்பணிகள் செய்தபோது கொண்டு வந்த கருங்கற்களால் மேலும் சேதம் அடைந்தது. ஆனால் அந்த சாலையை இதுவரை சீரமைக்கவில்லை. இதனால் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.