வேகத்தடை வேண்டும்

Update: 2023-04-26 14:28 GMT


தஞ்சை-நாகை சாலை வண்டிக்காரத்தெருவில் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பகுதியில் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். மேலும் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள், சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் முதியவர்கள் பெரிதும் அவதியடைகின்றனர். மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவயைான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்