புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் முதல் மேமனப்பட்டி வரை அமைந்துள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.