பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வழி சாலை அருகில் மின்நகர் பகுதி உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.