சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் கல்லல் ஊராட்சி இந்திராநகர் 12-வது வார்டில் துணை சுகாதார நிலையம் எதிரில் உள்ள சாலையின் அருகில் பழமையான மரம் ஒன்று எப்போது விழும் என்ற நிலையில் உள்ளது. இந்த மரத்தினால் வாகனஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர். எனவே ஆபத்தான மரத்தினை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.