ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் அன்றாடம் பயணிக்கும் நடைபாதையினர், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்துதர வேண்டும்.