பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே குதிரைவட்டம் பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் விரைவாக சென்று வர முடியாத நிலை உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.