சிதம்பரம் கடலூர் புறவழி சாலையில் மின்விளக்கு வசதி அமைத்துக் கொடுக்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் உள்ள வேகத் தடைகளில் வர்ணமும் பூசப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே புறவழிச்சாலையில் மின் விளக்குகள் அமைப்பதோடு வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டியது அவசியம்.
