வேகத்தடை அமைக்கப்படுமா ?

Update: 2023-04-09 12:14 GMT

அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து மேற்கு பகுதியில் அமைந்துள்ளது மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களும் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு பகுதி, கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர்கள் குடியிருக்கும் பகுதி உள்ளது. நீதிமன்றத்தின் நுழைவாயில் பகுதியில் மிகுந்த வாகன விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. அதாவது அரியலூர் பஸ் நிலையமான கிழக்கு பகுதியிலிருந்து மேற்கு புறம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைவரும் மின்னல் வேகத்தில் செல்வதால் தென்புறப்பகுதியில் உள்ள நீதிமன்றத்திற்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் என அனைவரும் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் தென்புறத்தில் இருந்து வடபுறத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் ஆகிய இடங்களுக்கும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது . சில சமயங்களில் தனியார் பஸ்கள் நீதிமன்ற நுழைவாயில் பகுதியில் பஸ்களை நீண்ட நேரம் நிறுத்தி விடுவதால் தெற்கிலிருந்து மேற்கு மற்றும் வடக்கு புறம் நோக்கி செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளை கிழக்கு புறத்திலிருந்து மேற்கு நோக்கி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இடித்து விடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் தொடர் விபத்துகள் நிகழும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நீதி மன்ற நுழைவாயில் பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துகளை தவிர்க்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்