உளுந்தூர்பேட்டை அருகே பரமேஸ்வரி மங்கலம் கிராமத்தில் சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனா். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?