திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த கோவிந்தகுடி தெற்குத் தெரு பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வலங்கைமான் பாபநாசம் மெயின் ரோட்டில் இணையும் பகுதியில் உள்ள சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது இந்த சாலை சேதமடைந்து கற்கள் சாலையாக உள்ளது. மேலும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைத்து தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.