சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் வால்பட்டறை அருகே குடிநீர் இணைப்புக்காக பள்ளம் தோண்டி மூடப்பட்டது. இருப்பினும் 2 அடி உயரத்திற்கு மேலாக ஜல்லி மண் கொட்டப்பட்டு பள்ளம் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். எனவே சாலையை சமப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.