திருவாரூர் தாலுகா புலிவலம் -வெள்ளக்குடி சாலை மன்னார்குடி இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் இந்த சாலையில் ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. சாலை சீரமைக்கும் பணி நடந்த போது வேகத்தடையை அப்புறப்படுத்தாமல் சாலை அமைத்து விட்டனர் .இதனால் வேகத்தடை இருந்த இடம் தெரியாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையை மீண்டும் அமைக்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.