நெல்லை அருகே நரசிங்கநல்லூர் பஞ்சாயத்து சன்மதிநகரில் இருந்து மெயின் ரோட்டுக்கு செல்வதற்கு மண்பாதையே உள்ளது. அதில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் மெயின் ரோட்டுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே சன்மதிநகரில் இருந்து மெயின் ரோட்டுக்கு செல்வதற்கு புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.