நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மாசிலா அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த வாகனங்களில் வந்து செல்கின்றனர். நாமக்கல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு நுழைவு சீட்டுகள் கொடுக்கும் இடத்திலிருந்து 400 மீட்டர் தொலைவு கொண்ட சாலை உள்ளது. இந்தநிலையில் சாலை பழுதடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள ஜல்லிக்கற்களால் சரிந்து கீழே விழுகின்றனர். எனவே மாசிலா அருவிக்கு உள்ளே செல்லும் சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.