தென்காசி - அம்பை மெயின்ரோட்டில் முதலியார்பட்டியில் ரெயில்வே கிராஸிங் உள்ளது. இங்கு ெரயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் அருகில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.