கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணி

Update: 2022-07-20 17:25 GMT

கரூர் மாவட்டம், நெய்தலூர் ஊராட்சி பனையூரில் இருந்து நச்சலூர் வரை புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்சாலைக்காக ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்டு மேலும் பணிகள் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டு பதியில் உள்ளது. தற்போது அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் நச்சலூர் இருந்து பனையூருக்கு தினமும் சென்று வருகின்றன. அந்த தார்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயந்து உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை பணியை விரைவில் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்