பெரம்பலூர் தலைமை தபால் அலுவலகம் உள்ள பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக கடைவீதிக்கும் தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளதால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.